பொன்னியின் செல்வன் தொடக்கம் !! Ponniyin selvan Introduction

பொன்னியின் செல்வன் தொடக்கம் !! Ponniyin selvan Introduction

Author: Aisamma Kadhaigal July 31, 2022 Duration: 2:29
பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. இப்புதினம் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது. பொன்னியின் செல்வன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்; என்றாலும் பொன்னியின் செல்வன் நிகழும் காலகட்டத்தில் வாழ்ந்த நிகழ்காலக் வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக அமைந்தது. விஜயாலய சோழன்(கி.பி 847 - 871) பல்லவர்களும் பாண்டியர்களும் பலமாக இருந்த காலத்தில் அவர்களை வென்று சோழர்களின் பொற்கால ஆட்சியை தோற்றுவித்த பெருமைக்குரியவர். அவருடைய மகன் ஆதித்த சோழனும் பல்லவர்களையும் கொங்கு நாட்டையும் வென்று விஜயாலய சோழன் தோற்றுவித்த சோழர் பேரரசை விரிவாக்கினார். அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தக சோழன்(கி.பி 907 - 955) ஈழத்திலும் பாண்டிய நாட்டிலும் பெற்ற வெற்றிகளே, பிற்காலச் சோழ மன்னர்களின் புகழ்பெற்றவர்கள் இராஜராஜ சோழனுக்கு, இராஜேந்திர சோழனுக்கும், முதலாம் குலோத்துங்க சோழனுக்கு சோழ சாம்ராஜ்ஜியத்தை தென்னிந்தியாவின் முதல் பேரரசாக விரிவுபடுத்த பெரிதும் உதவியது. முதலாம் பராந்தக சோழன் தன்னுடைய இறப்பிற்கு முன்னால் பெற்ற வெற்றிகளையும் அதனால் விரிவடைந்த சோழ சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய விவரங்களும் தெளிவாக கல்வெட்டுக்கள் மூலம் கிடைக்கின்றன. முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் மூன்றாம் கிருஷ்ணன் தலைமையிலான இராஷ்டிரகூடர்களுடனான போரில் சோழ இளவரசன் இராஜாதித்தன் தக்கோலத்தில் இறந்ததோடு மட்டுமல்லாது தொண்டை நாட்டையும் இராஷ்டிரகூடர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். இதன் காரணமாக சோழர்களின் அரசின் வட எல்லை தஞ்சாவூர், திருச்சிராய்ப்பள்ளி அளவிலேயே நின்றது. இந்தக் காலகட்டத்திற்குப் பிறகான சோழ மன்னர்கள் ஐந்து பேரின் பெயர்கள் தெளிவாகக் கிடைக்கின்றன ஆனால் அவர்களது ஆட்சிக்காலம் அவர்களைப் பற்றிய குறிப்புக்கள் தெளிவாக இல்லை. கண்டராதித்தர், அரிஞ்சய சோழர், இரண்டாம் பராந்தக சோழர், ஆதித்த கரிகாலன், மதுராந்தக சோழர் ஆகிய ஐவரே அந்த சோழ அரசர்கள். இதில் மதுராந்த சோழர் என்ற உத்தம சோழரைப் பற்றிய வரலாறு மட்டும் கிடைக்கிறது. இதில் ஆதித்த கரிகாலன் இராஷ்டிரகூடர்கள் முதலாம் பராந்தகனின் கடைசிக் காலத்தில் கைப்பற்றிய தொண்டை மண்டலத்தை மீண்டும் போரிட்டு கைப்பற்றினான் என்று தெரிகிறது. இரண்டாம் பராந்தகனின் இறப்பிற்குப் பின்னோ அல்லது ஆதித்த கரிகாலனின் இறப்பிற்குப் பின்னோ சோழ நாட்டில் அடுத்தப் பட்டத்திற்கான மன்னரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருந்திருக்கிறது. ஆதித்த கரிகாலன் கடம்பூரில் கொல்லப்பட்ட இடம் தற்போது மேலக்கடம்பூர் என அழைக்கபடுகிறது. காட்டுமன்னார்கோயில் அருகில் திருவாலங்காட்டுச் செப்பேடுகள், "விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான் என்று தெரிவிக்கின்றன. இந்தக் காலகட்டத்தைத்தான் கல்கி தன்னுடைய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்திற்கான கதைக்களமாகத் தேர்ந்தெடுத்தார். பொன்னியின் செல்வன் என்பது இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று, அருள்மொழிவர்மருடைய பெயராக கல்வெட்டுக்களில் காணப்படுவது இராஜகேசரி வர்மன் அல்லது மும்முடி சோழ தேவன் என்பது. பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தின் கதாநாயகனாக வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனைக் கல்கி அவர்கள் தேர்ந்தெடுத்தார்; வந்தியத்தேவனைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் தஞ்சைப் பெரிய கோயில் கிடைக்கின்றன. இராஜராஜ சோழரின் தமக்கையும் வல்லவரையர் வந்தியத்தேவரின் மனைவியுமான ஆழ்வார் பராந்தகை குந்தவையார் என்று கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்கி மேலும் K.A. நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் புத்தகத்தையும், T.V. சதாசிவப் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரத்தையும் மையமாக வைத்து பொன்னியின் செல்வனை எழுதினார்.இதில் பிற்காலச் சோழர் சரித்திரத்தில் வந்தியத்தேவனைப் பற்றிய ஐந்து வரிகள் காணப்படுகின்றன. இதனை மையமாக வைத்தே வந்தியத்தேவனை பொன்னியின் செல்வனின் கதாநாயகனாக கல்கி வைத்தார். Excerpt & Images : Google Check out the other stories to

Aisamma Kadhaigal !! Tamil Short Story For Kids எனும் இந்த பாட்காஸ்ட், ஒரு தாயின் இதயத்தில் இருந்து வரும் கதைகளின் தொகுப்பாகும். நான் சிறு வயதில் கேட்டு மகிழ்ந்த, படித்து ரசித்த அதே பழம்பெரும் கதைகளை, இப்போது என் சொந்த குழந்தைகளுக்கு சொல்லும் மகிழ்ச்சியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். ஒவ்வொரு எபிசோடும் சிறிய, இனிமையான கதையாக இருக்கும், இது உங்கள் குடும்ப நேரத்தை மிகவும் சிறப்பாக ஆக்கும். ஒவ்வொரு கதையும் எளிய, நேரடியான தமிழில் சொல்லப்படுகிறது, இதனால் சிறு வயது குழந்தைகளும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். இந்த பாட்காஸ்ட் கேட்கும் போது, நீங்கள் கேட்பது வெறும் கதைகள் மட்டுமல்ல, அது ஒரு தாயின் பாசமும், அவர் தன் குழந்தைகளுக்கு அளிக்கும் அன்பு நிறைந்த குரலும் கூட. நான் சொல்வதில் ஏதேனும் குறை இருந்தாலும், அதை எனக்குத் தெரிவிப்பது என்னை மேம்படுத்த உதவும். மிக முக்கியமாக, உங்கள் சிறு குழந்தைகள் எந்த கதைகளை விரும்புகிறார்கள், அவர்களின் கருத்துக்கள் என்ன என்பதைச் சொல்ல மறக்காதீர்கள். உங்கள் குடும்பத்தினரோடு அமர்ந்து, இந்தப் பாரம்பரியக் கதைகளின் வழியாக ஒரு அற்புதமான பயணத்தைத் தொடங்குங்கள்.
Author: Language: Tamil Episodes: 100

Aisamma Kadhaigal !! Tamil Short Story For Kids
Podcast Episodes
CCK35. அண்ணன் தம்பி பாகப்பிரிவினை கதை Brothers Share !! Short stories for kids in Tamil [not-audio_url] [/not-audio_url]

Duration: 9:15
சின்ன சின்ன கதைகள் அண்ணன் தம்பி பாகப்பிரிவினை Check out the other stories too @ஐஸாம்மா கதைகள் !! Aisamma Kadhaigal !! Tamil Story அக்பர் பீர்பால் கதைகள் !! Akbar and Birbal Stories in Tamil: https://www.youtube.com/playl…
ANK01. தேளும் தவளையும் The Scorpion and the Frog !! Aesop Fables in Tamil [not-audio_url] [/not-audio_url]

Duration: 5:21
ஈசாப் நீதிக்கதைகள் 01 01. தேளும் தவளையும் Aesop Fables 01 01. The Scorpion and the Frog Check out the other stories too @ஐஸாம்மா கதைகள் !! Aisamma Kadhaigal !! Tamil Story அக்பர் பீர்பால் கதைகள் !! Akbar and Birbal Stori…
ANK. ஈசாப் நீதிக்கதைகள் தொடக்கம் Aesop Fables in Tamil [not-audio_url] [/not-audio_url]

Duration: 5:31
ஈசாப் நீதிக்கதைகள் தொடக்கம் Aesop Fables Beginning Check out the other stories too @ஐஸாம்மா கதைகள் !! Aisamma Kadhaigal !! Tamil Story அக்பர் பீர்பால் கதைகள் !! Akbar and Birbal Stories in Tamil: https://www.youtube.com/…
VK46.19வது பதுமை அமிர்தசஞ்சீவினி கதை 20வது படி பதுமை சொன்ன சூதாடி கதை Vikramadityan Stories Tamil [not-audio_url] [/not-audio_url]

Duration: 8:40
விக்கிரமாதித்தன் கதைகள் பகுதி 46 19வது படி‌ சற்குணவல்லி பதுமை சொன்ன அமிர்தசஞ்சீவினி கதை 20வது படி சுந்தர வினோதவல்லி பதுமை சொன்ன சூதாடி கதை Vikramadhithyan stories Episode 46 19th step Sargunavalli doll's Amruthasanjeevin…
BK41. சிரிப்பதா அழுவதா & பீர்பாலின் கிச்சடி !! அக்பர் பீர்பால் கதைகள் Akbar Birbal Story Completed [not-audio_url] [/not-audio_url]

Duration: 9:35
அக்பர் பீர்பால் கதைகள் நிறைவு அக்பர் பீர்பால் கதைகள் பகுதி 41 114. சிரிப்பதா அழுவதா 115. பீர்பாலின் கிச்சடி Akbar Birbal Stories Completed Akbar and Birbal Stories Episode 41 114. To laugh or to cry 115. Birbal's Kitchad…
BK40.அக்பரும் ஓவியரும், நெருப்பும் காற்றும் & விறகுவெட்டியும் நாவிதரும் Akbar Birbal Stories Tamil [not-audio_url] [/not-audio_url]

Duration: 10:09
அக்பர் பீர்பால் கதைகள் பகுதி 40 111. அக்பரும் ஓவியரும் 112. காகிதத்தில் நெருப்பும் காற்றும் 113. விறகு வெட்டியும் நாவிதரும் Akbar and Birbal Stories Episode 40 111. Akbar and the artist 112. Fire and Air on paper 113. Wo…
BK39.பீர்பாலின் விசித்திரமான தீர்ப்பு &அக்பரின் மெத்தை Birbal's justice & Akbar's bed Tamil story [not-audio_url] [/not-audio_url]

Duration: 11:38
அக்பர் பீர்பால் கதைகள் பகுதி 39 109. பீர்பாலின் விசித்திரமான தீர்ப்பு 110. அக்பரின் மெத்தை Akbar and Birbal Stories Episode 39 109. Birbal's strange justice 110. Akbar's bed Check out the other stories too @ஐஸாம்மா கதைகள…
BK38.பீர்பாலும் ராய்தாஸும்,முல்லாவின் தலை Birbal & Raidas,Mullah's head Akbar Birbal Stories Tamil [not-audio_url] [/not-audio_url]

Duration: 9:20
அக்பர் பீர்பால் கதைகள் பகுதி 38 107. பீர்பாலும் ராய்தாஸும் 108. முல்லாவின் தலை Akbar and Birbal Stories Episode 38 107. Birbal and Raidas 108. Mullah's head Check out the other stories too @ஐஸாம்மா கதைகள் !! Aisamma Kadh…
BK37. அழகான குழந்தை, விரைவான பயணம், சூடான இரும்பு & கோணல் கழுத்து Akbar Birbal Stories in Tamil [not-audio_url] [/not-audio_url]

Duration: 11:11
அக்பர் பீர்பால் கதைகள் பகுதி 37 103. அழகான குழந்தை 104. விரைவான பயணம் 105. சூடான இரும்பு 106. கோணல் கழுத்து Akbar and Birbal Stories Episode 37 103. Beautiful child 104. Quicker journey 105. RedHot rod 106. Crooked neck…