சண்டிகேஸ்வரர் ஆன்மீகம் அறிவோம்
வழங்குபவர் சரவணன் அருணாச்சலம்

சண்டிகேஸ்வரர் ஆன்மீகம் அறிவோம் வழங்குபவர் சரவணன் அருணாச்சலம்

Author: SARAVANANARUNACHALAM April 13, 2024 Duration: 2:45
சண்டிகேஸ்வரர் ஆன்மீகம் அறிவோம் வழங்குபவர் சரவணன் அருணாச்சலம் *சண்டிகேஸ்வரர்* சிவபெருமானின் பிரதிநிதியான சண்டிகேஸ்வரரை வில்வ இலை கொண்டு மாலைகள் சூட்டி வழிபட்டால் வாழ்வில் அனைத்து வளங்களும் பெறலாம். *வேண்டுதல்களை நிறைவேற்றும் சண்டிகேஸ்வரர் வழிபாடு !* சிவ தலங்களில் நந்தியம் பெருமானும், சண்டிகேஸ்வரரும் கட்டாயம் இடம்பெறுவார்கள். நந்தியின் காதுகளில் நம் வேண்டுதல்களை கூறினால் பலிக்கும் எனும் நம்பிக்கை கொண்டவர்கள், ஏன் சண்டிகேஸ்வரரிடம் மட்டும் சப்தம் போடாமல் வேண்ட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா? *சிவனின் மெய்க்காவலர் நந்தி என்றால், ஈசனின் ஆலயக் காப்பாளர் சண்டிகேஸ்வரர்* பொதுவாகவே கோவில்களுக்கு சென்றால் நாம் அங்கு தேவைப்படும் சேவைகளை மட்டுமே செய்ய வேண்டும். அங்கு இருக்கும் எந்தப் பொருளுக்கும் ஆசைப்படுவதோ, அதை தனக்குரியதாக்கி எடுத்து வருவதோ நல்லதல்ல. சிவனின் உதவியாளரான சண்டிகேஸ்வரர், எந்நேரமும் சிவ சிந்தனையில் ஆழ்ந்து தியானத்தில் இருப்பவர். மனிதனுக்கு கேட்கும் திறன் கொண்ட காதுகளைப்போல் சிவனின் ஆலயத்தில் சண்டிகேஸ்வரர் குடிகொண்டிருக்கும் இடம் இறைவனின் செவியாகிறது. இறைவனிடம் நாம் வேண்டுவதை அவரின் உதவியாளரான சண்டிகேஸ்வரர் தியானத்திலேயே கேட்டு உணர்ந்து, அவைகளை அவரவர் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப கணக்கெழுதி இறைவனிடம் சமர்பிப்பதாக ஐதீகம். ஆகவே தான் சிவன் கோவில் சென்றால் இவரைப் பார்க்காமல் செல்லக்கூடாது என்பார்கள். யோக நிலையில் உள்ள இவரை வணங்கினால் நல்ல பேச்சுத் திறனுடன், நினைவாற்றலும் பெருகி அறிவு வளரும். எந்நேரமும் கண்மூடி சிவசிந்தனையில் இருக்கும் இவரின் தியானம், நம்மால் கலைந்து விடக் கூடாது என்றே அவரை அமைதியாக வணங்குமாறு அறிவுத்துகின்றார்கள் பெரியவர்கள். ஆனால் நான் ஆலயத்திலிருந்து எதுவும் எடுத்துச்செல்ல வில்லை என்பதை அவருக்கு காட்டும் வண்ணம் இரு கைகளையும் சப்தமில்லாமல் துடைத்துக் காண்பிக்க வேண்டும். இவரை நம்பிக்கையுடன் வணங்கினால் தொலைந்து போன பொருட்களும் நமக்குக் கிடைக்கும். இவருக்கு உரிய திதிகள் பிரதமை மற்றும் நவமி ஆகும். புதன்கிழமை இவரை வணங்கிட ஏற்ற நாள். சிவபெருமானின் பிரதிநிதியான இவருக்கும் வில்வ இலை கொண்டு மாலைகள் சூட்டி வழிபட்டால் வாழ்வில் அனைத்து வளங்களும் பெறலாம்.

TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM எனும் இந்தப் பாட்காஸ்ட், செம்மொழியான தமிழின் ஆழத்தையும் அழகையும் குடும்பத்தினருடனும், சிறுவர்களுடனும் பகிர்ந்துகொள்ளும் ஒரு இடமாகும். இதை வழங்குபவர் SARAVANANARUNACHALAM. பரிதிமாற் கலைஞர் குறிப்பிட்டதைப் போல, தமிழ் ஒரு உயர் தனிச் செம்மொழி என்பதில் உள்ள நம்பிக்கையே இந்தக் குரல்நூல்களுக்கான அடித்தளம். இங்கே, நீங்கள் கேட்கும் கதைகளும் வாசிப்புகளும் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அவை ஒரு மொழியின் செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகள். சங்க இலக்கியங்களின் கனிவு, மாணவர்களுக்கான கல்விச் செல்வங்கள், கற்பனை நிறைந்த சிறுகதைகள், இசையமைதியான பாடல்கள், பல்வேறு மொழிகளிலிருந்து தமிழாக்கப்பட்ட கட்டுரைகள் ஆகியவற்றை இந்தப் பாட்காஸ்ட் மூலம் நேரடியாகக் கேட்க முடியும். வழங்குபவர் தாமே இணையத்தில் தேடிப் படித்து, தேர்ந்தெடுக்கும் இலக்கியத் துளிகளை உங்கள் செவிகளுக்கு எடுத்துச் செல்கிறார். ஒவ்வொரு அத்தியாயமும் தமிழின் வரலாற்று வேருக்கும் நவீன வாழ்விற்கும் இடையே ஒரு பாலமாக அமைகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தமிழின் இனிமையில் மூழ்க, இது ஒரு வழிகாட்டியாக உள்ளது. இந்தக் குரல்நூல்கள் குட்டலூரிலிருந்து வெளிவருகின்றன, ஆனால் அவை தமிழ் பேசும் எந்த இதயத்தையும் சென்றடையும். இலக்கியத்தின் மீதான ஒரு தனிப்பட்ட அன்பும், மொழியைப் பாதுகாக்கும் பங்களிப்பும் ஒவ்வொரு எபிசோடிலும் ஒலிக்கின்றன.
Author: Language: Tamil Episodes: 100

TAMIL PODCAST IN CUDDALORE.
 தமிழால் இணைவோம்

 வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM
Podcast Episodes
கோயில்-2 சிதம்பரம் ஆறாம் திருமுறை திருநாவுக்கரசர் அருளியது .பாடலும் பொருளும் வழங்குபவர் சரவணன் . [not-audio_url] [/not-audio_url]

Duration: 16:15
கோயில்-2 சிதம்பரம் ஆறாம் திருமுறை திருநாவுக்கரசர் அருளியது .பாடலும் பொருளும் வழங்குபவர் சரவணன் அருணாச்சலம்
கோயில் சிதம்பரம் ஆறாம் திருமுறை திருநாவுக்கரசர் அருளியது பாடலும் பொருளும் ஒலி வடிவம் சரவணன் [not-audio_url] [/not-audio_url]

Duration: 15:53
கோயில் சிதம்பரம் ஆறாம் திருமுறை திருநாவுக்கரசர் அருளியது பாடலும் பொருளும் ஒலி வடிவம் சரவணன் அருணாச்சலம்
கோமுக தீர்த்தம்
வழங்குபவர் சரவணன் அருணாச்சலம் [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:29
கோமுக தீர்த்தம் வழங்குபவர் சரவணன் அருணாச்சலம் *கோமுக தீர்த்தம் என்றால் என்ன?* *சகல தோஷம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ உதவும் கோமுக தீர்த்தம் ... கோவில்களில் தெய்வங்களுக்கு அபிஷேக அரிய பல புண்ணிய திரவிய பொருட்களில் சில சா…
திருஞானசம்பந்தர் சுவாமிகளுக்கும் திருநாவுக்கரசு சுவாமிகளுக்கும் திருவீழிமிழலையில் படிக்காசு பெறுதல் [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:40
திருஞானசம்பந்தர் சுவாமிகளுக்கும் திருநாவுக்கரசு சுவாமிகளுக்கும் திருவீழிமிழலையில் படிக்காசு பெறுதல் ஒலி வடிவம் சரவணன் அருணாச்சலம்
திருக்கோலக்கா#சீர்காழி#தாளபுரீஸ்வரர் திருஞானசம்பந்தர் அருளியது ஒலி வடிவம் சரவணன் அருணாச்சலம் [not-audio_url] [/not-audio_url]

Duration: 11:42
திருக்கோலக்கா திருஞானசம்பந்தர் அருளியது ஒலி வடிவம் சரவணன் அருணாச்சலம் #தாளபுரீஸ்வரர்# ஓசை நாயகி #சீர்காழி ரயிலடி அருகில்
திருக்கயிலாயம் 6-055 திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது ஆறாம் திருமுறை ஒலி வடிவம் சரவணன் அருணாச்சலம் [not-audio_url] [/not-audio_url]

Duration: 10:43
திருக்கயிலாயம் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது ஆறாம் திருமுறை ஒலி வடிவம் சரவணன் அருணாச்சலம்

«1...678910