SNAKE-KOVAI-FOREST DEPARTMENT-FIELD SURVEY-SNAKECATCHERSAWARENESS#SARAVANANARUNACHALAM#PODCASTER

SNAKE-KOVAI-FOREST DEPARTMENT-FIELD SURVEY-SNAKECATCHERSAWARENESS#SARAVANANARUNACHALAM#PODCASTER

Author: SARAVANANARUNACHALAM February 14, 2026 Duration: 10:31

SNAKE-KOVAI-FOREST DEPARTMENT-FIELD SURVEY-SNAKECATCHERSAWARENESS.

நகரமயமாக்கலால் பாம்புகளின் வாழ்விடம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய, கோவை நகருக்குள் 35 மாதங்களில் பாம்பு மீட்பாளர்களால் பிடிக்கப்பட்ட பாம்புகள் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் குறிப்பிட்ட சில மாதங்களில், குறிப்பிட்ட நேரங்களில் பாம்புகள் வீடுகளுக்குள் அதிகளவில் படையெடுப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் அதிக ஆபத்தானவையாக கருதப்படும் 'பிக் 4' நச்சுப் பாம்புகள் கோவை நகருக்குள் அதிகளவில் இருப்பதையும் அந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

வரும் காலத்தில் பாம்புக்கடி சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இதுகுறித்த ஆய்வுகள் தொடர வேண்டுமென்று வனஉயிரின உயிரியலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழக வனத்துறை இதற்காக 'நாகம்' என்ற பிரத்தியேக செயலி உருவாக்கியுள்ள நிலையில், இதற்காக மத்திய அரசின் சார்பிலும் பிரத்யேக செயலி உருவாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய சுகாதார நிறுவனக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பாம்புக்கடி உயிரிழப்பில் மேற்கு வங்காளம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாமிடத்திலும் உள்ளன.

கோயம்புத்துார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் (CMCH) மாதத்திற்கு சராசரியாக 78 நோயாளிகள் பாம்புக்கடிக்கு சிகிச்சை பெறுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அங்கே,

  • 2022-இல் 976 பாம்புக்கடி சம்பவங்களும் 40 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன
  • 2023-இல் 971 பாம்புக்கடி சம்பவங்களும் 40 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன
  • 2024-இல் அக்டோபர் வரையில் 2,591 பாம்புக்கடி சம்பவங்களும் 108 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN

ஆனால் 2025-ஆம் ஆண்டில் பாம்புக்கடிக்கு 970 பேர் சிகிச்சைக்கு வந்ததில் 21 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும், முந்தைய ஆண்டுகளை விட மரண விகிதம் குறைந்திருப்பதாகவும் பிபிசி தமிழிடம் மருத்துவமனை டீன் அலுவலகம் தெரிவித்தது.

பாம்பு கடித்து, மருத்துவமனைக்கு தாமதமாக வரும் நோயாளிகளை மட்டுமே காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவமனை நிர்வாகிகள் கூறுகின்றனர்.

கோவையில் குடியிருப்புகளுக்குள் படையெடுக்கும் பாம்புகள்படக்குறிப்பு,நாகப் பாம்பு

பாம்பு என்பது ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு உயிரினம் ஆகும். இது முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்டது. இதற்கு கால்கள் இல்லை ; எனினும் தன் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நீந்தக்கூடியவை. பாம்புகளில் தோராயமாக 3,600 இனங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 600 இனங்கள் நச்சுப் பாம்புகள் ஆகும். இந்தியாவிலுள்ள ராஜ நாகம், நல்ல பாம்பு, கட்டுவிரியன் போன்றவை நச்சுப் பாம்புகள் ஆகும். இவ்வகை நச்சுப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவும் உணவுக்காகவும் நஞ்சை பயன்படுத்துகின்றன. இரைகளை பற்களால் கவ்விக் கடிக்கும்போது பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து நஞ்சு வெளியேறி இரையின் உடலுள்ளே சென்று அதைக் கொல்கிறது.

இந்தியாவில் மட்டும் 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்கள் மட்டுமே நச்சுடையவை. ஒருசில நச்சுப்பாம்புகளின் நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்குகின்றது. அவற்றில் நாகப்பாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் என்பன குறிப்பிடத்தக்கவை ஆகும். வேறு சில பாம்புகளின் நஞ்சு இரத்தக் குழாய்களையும் இரத்த அணுக்களையும் தாக்கி அழித்து குருதி உறைவதையும் நிறுத்தவல்லது. கண்ணாடி விரியன் என்னும் பாம்பு இவ்வகையைச் சேர்ந்ததாகும். இலங்கையில் தோராயமாக 200 பாம்பு இனங்கள் உள்ளன.



TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM எனும் இந்தப் பாட்காஸ்ட், செம்மொழியான தமிழின் ஆழத்தையும் அழகையும் குடும்பத்தினருடனும், சிறுவர்களுடனும் பகிர்ந்துகொள்ளும் ஒரு இடமாகும். இதை வழங்குபவர் SARAVANANARUNACHALAM. பரிதிமாற் கலைஞர் குறிப்பிட்டதைப் போல, தமிழ் ஒரு உயர் தனிச் செம்மொழி என்பதில் உள்ள நம்பிக்கையே இந்தக் குரல்நூல்களுக்கான அடித்தளம். இங்கே, நீங்கள் கேட்கும் கதைகளும் வாசிப்புகளும் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அவை ஒரு மொழியின் செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகள். சங்க இலக்கியங்களின் கனிவு, மாணவர்களுக்கான கல்விச் செல்வங்கள், கற்பனை நிறைந்த சிறுகதைகள், இசையமைதியான பாடல்கள், பல்வேறு மொழிகளிலிருந்து தமிழாக்கப்பட்ட கட்டுரைகள் ஆகியவற்றை இந்தப் பாட்காஸ்ட் மூலம் நேரடியாகக் கேட்க முடியும். வழங்குபவர் தாமே இணையத்தில் தேடிப் படித்து, தேர்ந்தெடுக்கும் இலக்கியத் துளிகளை உங்கள் செவிகளுக்கு எடுத்துச் செல்கிறார். ஒவ்வொரு அத்தியாயமும் தமிழின் வரலாற்று வேருக்கும் நவீன வாழ்விற்கும் இடையே ஒரு பாலமாக அமைகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தமிழின் இனிமையில் மூழ்க, இது ஒரு வழிகாட்டியாக உள்ளது. இந்தக் குரல்நூல்கள் குட்டலூரிலிருந்து வெளிவருகின்றன, ஆனால் அவை தமிழ் பேசும் எந்த இதயத்தையும் சென்றடையும். இலக்கியத்தின் மீதான ஒரு தனிப்பட்ட அன்பும், மொழியைப் பாதுகாக்கும் பங்களிப்பும் ஒவ்வொரு எபிசோடிலும் ஒலிக்கின்றன.
Author: Language: Tamil Episodes: 100

TAMIL PODCAST IN CUDDALORE.
 தமிழால் இணைவோம்

 வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM
Podcast Episodes
Microplastics in the human body raise major health concerns.mp3#disadvantages#bottle#water#food#voiceover#sarvamai#TTS#saravananarunachalam#creator [not-audio_url] [/not-audio_url]

Duration: 1:37
Microplastics in the human body raise major health concerns.mp3#cautions#safelife#save nature##voiceover#sarvamai#TTS#saravananarunachalam#creatorமனித உடலில் மைக்ரோபிளாஸ்டிக்: அதிகரிக்கும் சுகாதார அச்சம், கட்டுப்பாட்டு ந…
PAGES OF HISTORY-february #EVENTS#past history [not-audio_url] [/not-audio_url]

Duration: 10:19
PAGES OF HISTORY-february #EVENTS#past history DateEventFebruary 1Indian Coast Guard DayFebruary 2World Wetlands DayFebruary 4World Cancer DayFebruary 6International Day of Zero Tolerance for Female Genital MutilationFeb…