மாய உலகத்தில் ஒரு பிரவேசம் கதையாசிரியர்: அ.வேளாங்கண்ணி

மாய உலகத்தில் ஒரு பிரவேசம் கதையாசிரியர்: அ.வேளாங்கண்ணி

Author: SARAVANANARUNACHALAM December 13, 2024 Duration: 11:55

மாய உலகத்தில் ஒரு பிரவேசம் கதையாசிரியர்: அ.வேளாங்கண்ணி

ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

அழுது கொண்டிருந்தான் அஸ்வின். அப்பா அடித்துவிட்டார். அம்மா திட்டிவிட்டாள். வாங்கியதோ குறைந்த மதிப்பெண், ஆனால் அதைத் திருத்தி அதிகமென ஆக்கியதை கண்டுபிடித்துவிட்டார்கள். அவ்வப்போது சின்னச் சின்ன தவறுகள் செய்வான் தான். சிறிது நேரத்தில் அவற்றை மன்னித்து விடுவார்கள். ஆனால் இந்த தவறுக்கு அவனை வெளுத்து விட்டார்கள்.

அழுதபடியே கட்டிலுக்கு கீழே படுத்திருந்தான். கொஞ்சம் பெரிய கட்டில். நேரமாக நேரமாக கட்டிலுக்கு கீழேயிருந்த இருள் கண்களுக்குப் பழகிவிட்டது. தேம்பல் நின்றது. சாப்பாடு நேரம் கடந்தது. ஆனால் இவனை யாரும் தேடவில்லை. கோபமாய் படுத்திருந்தான். கட்டிலுக்கு கீழே உருண்டபடியே சுவற்றின் ஓரத்திற்குச் சென்றான்.

சென்றவன் கைகளில் எதோ சின்ன கைப்பிடி போல தட்டுப்பட்டது. அதில் கையை வைத்தவன் விளையாட்டாக திருக ஆரம்பித்தான். அந்தக் கைப்பிடியும் இவன் சுற்றச் சுற்ற.. மறுப்பேதும் சொல்லாமல் சுற்ற ஆரம்பித்தது.

இரண்டு சுற்று தான் சுற்றியிருப்பான்.. இருளாய் இருந்த கட்டிலடி இப்போது சிறிது வெளிச்சத்திற்கு வந்ததைப் போல உணர்ந்தவன்.. கண்களை நன்றாகத் திறந்து பார்க்க.. அந்த கைப்பிடியின் அருகில்.. ஒரு சிறிய இடைவெளி தோன்றி இருந்தது. கைப்பிடியை மேலும் மேலும் திருக.. இடைவெளி அதிகமாகிக் கொண்டே போனது.

சிறிது நேரத்தில் நன்றாக இடைவெளி வந்துவிட வெளிச்சமும் முழுதாக உள்ளேயிருந்து வந்தது. ஆச்சரியம் அடைந்தவன் மெல்ல அந்த இடைவெளிக்குள் படுத்தபடியே சென்றான். உடனே ஒரு சிறிய பள்ளம் வர.. உள்ளே குதித்தான். அவன் முன்னே ஒரு பாதை தென்பட்டது.

‘இது என்ன கட்டிலுக்கு கீழே எதாவது சுரங்கமா..!’

‘இதுல போலாமா வேணாமா..!’ திரும்பி தான் இறங்கிய வழியைப் பார்த்தான். எளிதாக ஏறிவிடலாம் போலத்தான் தோன்றியது. அந்தப்பாதையின் சிறிது தூரத்தில் ஒரு சிறிய தோட்டம் காணப்பட்டது. அதன் நுழைவாயிலே அரண்மனை முகப்பு போல இருந்தது.

இவனுக்கு பிடி கொள்ளவில்லை. உடனே போய்விடலாம் என வேக வேகமாக நடக்க ஆரம்பித்தான். தூரத்தில் ஒரு நதியின் ஓசை கேட்டது. பலவித பறவைகள் எழுப்பும் ஒலிகளும் கேட்டது. மெல்லிய தென்றலும் அங்கே உலவிக் கொண்டிருக்க.. ‘இது என்ன புதுசா இருக்கு.. இதப்பத்தி நம்ம வீட்டுல யாருக்காவது தெரியுமா.. தெரியாதா..’ என யோசித்தவனின் வயிறு இப்போது அனத்தத் தொடங்கியது.

பசி.. பசி.. பசி..

ஆகா.. இப்பப் போயி இப்படிப் பசிக்குதே..! இங்க நான் யார்கிட்ட போய் சாப்பாடு கேட்க.. என அஸ்வின் நினைத்த மறு நொடி.. இரண்டு மூன்று வித்தியாசமான உருவங்கள் அவன் முன் தோன்றின..

மூன்று அடிகளே கொண்ட விசித்திர உருவங்கள்.

Tags: அ.வேளாங்கண்ணி


TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM எனும் இந்தப் பாட்காஸ்ட், செம்மொழியான தமிழின் ஆழத்தையும் அழகையும் குடும்பத்தினருடனும், சிறுவர்களுடனும் பகிர்ந்துகொள்ளும் ஒரு இடமாகும். இதை வழங்குபவர் SARAVANANARUNACHALAM. பரிதிமாற் கலைஞர் குறிப்பிட்டதைப் போல, தமிழ் ஒரு உயர் தனிச் செம்மொழி என்பதில் உள்ள நம்பிக்கையே இந்தக் குரல்நூல்களுக்கான அடித்தளம். இங்கே, நீங்கள் கேட்கும் கதைகளும் வாசிப்புகளும் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அவை ஒரு மொழியின் செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகள். சங்க இலக்கியங்களின் கனிவு, மாணவர்களுக்கான கல்விச் செல்வங்கள், கற்பனை நிறைந்த சிறுகதைகள், இசையமைதியான பாடல்கள், பல்வேறு மொழிகளிலிருந்து தமிழாக்கப்பட்ட கட்டுரைகள் ஆகியவற்றை இந்தப் பாட்காஸ்ட் மூலம் நேரடியாகக் கேட்க முடியும். வழங்குபவர் தாமே இணையத்தில் தேடிப் படித்து, தேர்ந்தெடுக்கும் இலக்கியத் துளிகளை உங்கள் செவிகளுக்கு எடுத்துச் செல்கிறார். ஒவ்வொரு அத்தியாயமும் தமிழின் வரலாற்று வேருக்கும் நவீன வாழ்விற்கும் இடையே ஒரு பாலமாக அமைகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தமிழின் இனிமையில் மூழ்க, இது ஒரு வழிகாட்டியாக உள்ளது. இந்தக் குரல்நூல்கள் குட்டலூரிலிருந்து வெளிவருகின்றன, ஆனால் அவை தமிழ் பேசும் எந்த இதயத்தையும் சென்றடையும். இலக்கியத்தின் மீதான ஒரு தனிப்பட்ட அன்பும், மொழியைப் பாதுகாக்கும் பங்களிப்பும் ஒவ்வொரு எபிசோடிலும் ஒலிக்கின்றன.
Author: Language: Tamil Episodes: 100

TAMIL PODCAST IN CUDDALORE.
 தமிழால் இணைவோம்

 வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM
Podcast Episodes
Anthropic released computer use for Claude Cowork and Claude Code [not-audio_url] [/not-audio_url]

Duration: 4:16
Anthropic released computer use for Claude Cowork and Claude CodeAnthropic has introduced "computer use" capabilities for Claude Cowork and Claude Code, allowing the AI to directly interact with computers by clicking, ty…
international space flight day [not-audio_url] [/not-audio_url]

Duration: 1:26
international space flight day 12-04-The beginning of the space era for mankindThe General Assembly, in its resolution A/RES/65/271 of 7 April 2011, declared 12 April as the International Day of Human Space Flight “to ce…
international day for street children - [not-audio_url] [/not-audio_url]

Duration: 2:30
international day for street children The International Day for Street Children (IDSC) is observed annually on April 12th to highlight the rights of street-connected children, focusing on protection rather than punishmen…
-உலகம் எப்போது அழியும் - பிரபஞ்சம் பற்றிய 3 கோட்பாடுகள் #RJ SARAVANANARUNACHALAM # [not-audio_url] [/not-audio_url]

Duration: 9:14
-உலகம் எப்போது அழியும் - பிரபஞ்சம் பற்றிய 3 கோட்பாடுகள்உலகம் (பூமி) அல்லது ஒட்டுமொத்த பிரபஞ்சம் எப்படி முடிவுக்கு வரும் என்பது குறித்து அறிவியலாளர்கள் முன்வைக்கும் 3 முக்கிய கோட்பாடுகள் இங்கே: பெருமுடக்கம் (The Big Crunc…
-நீங்கள் இரவில் நன்றாக தூங்க நொறுக்குத் தீனிகள் உதவுமா.? RJ SARAVANANARUNACHALAM. #VOICE OVER [not-audio_url] [/not-audio_url]

Duration: 9:31
-நீங்கள் இரவில் நன்றாக தூங்க நொறுக்குத் தீனிகள் உதவுமா.?SOURCE-https://www.bbc.com/tamil/articles/c8r1n7dedykoGOOGLE AI MODE ANSWER இரவில் நீங்கள் உண்ணும் நொறுக்குத் தீனிகள் (Snacks) உங்கள் தூக்கத்திற்கு உதவுவதை விட, பாத…
0 story.mp3#zero story3motivational story#aivoice#sarvamai #creator#saravananarunachalam [not-audio_url] [/not-audio_url]

Duration: 3:44
0 story.mp3#zero story3motivational story#aivoice#sarvamai #creator#saravananarunachalamபூஜ்ஜியம் என்றால் ஒன்றும் இல்லையா?ரஷ்யாவின் கல்வி முறையில்,ஒரு தேர்வில் பெறக்கூடிய அதிகபட்ச மதிப்பெண் 5.ஆனால் அதில் ஒரு ஆச்சரியமான வ…